திருநெல்வேலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

DIN

கிறிஸ்தவர்களின் தவக்காலம் "சாம்பல் புதன்' அல்லது "விபூதி புதன்' எனப்படும் நிகழ்வுடன் புதன்கிழமை தொடங்குகிறது.  
கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும்,  இறைவனோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவுகிறது.  இதையொட்டி, பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் புதன்கிழமை (பிப்.14) அதிகாலை 6 மணிக்கு ஆயர் ஆ. ஜூடுபால்ராஜ் தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெறுகிறது.
தவத்தின் அடையாளமாக சாம்பலை நெற்றியில் பூசி தவக்காலத்தை தொடங்குகின்றனர். இம்மாதம் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு இறைமக்கள் சிலுவைப் பயணம் செல்கின்றனர்.
25ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிலுவைப் பாதை, திருப்பலியும்,  மார்ச் 4ஆம் தேதி காலை 9 மணிமுதல் சிறப்பு தியானம், 10ஆம் தேதி தவக்கால திருப்பயணமும் நடைபெற உள்ளன.
ஈஸ்டர் பெரு விழாவுக்கு முன்பாக ஒரு வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது. 25ஆம் தேதி குருத்துவ ஞாயிறு நிகழ்ச்சியையொட்டி காலை 7 மணிக்கு குருத்தோலை பவனி,  திருப்பலி ஆகியன நடைபெறுகிறது.
29ஆம் தேதி பெரிய வியாழன் திருச் சடங்குகளும்,  30ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை நிகழ்வுகளும், 31ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு பேராலயத்தில் ஆயர் தலைமையில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT