திருநெல்வேலி

தூய சவேரியார் பேராலயத்தில் சிலுவைப் பயணம்

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் தவக்கால சிலுவைப் பயண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த 14 ஆம் தேதி தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத்தின் சார்பில் தவக்கால சிலுவைப் பயண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆ.ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். பேராலயத்தில் இருந்து சிலுவைகளுடன் பக்தர்கள் நடந்து சென்றனர். தூய யோவான் கல்லூரி சாலை வழியாக கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிலுவைப்பாதை நிறைவடைந்தது. அங்கு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 
தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பண்டிகையும், 29 ஆம் தேதி பெரிய வியாழன் திருச்சடங்குகளும், 30 ஆம் தேதி புனிதவெள்ளி நிகழ்வுகளும் பேராலயத்தில் நடைபெறுகின்றன. மார்ச் 31 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT