முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி முத்தாரம்மன் கோயிலிலில் முளைப்பாரி

மழை வேண்டியும்,  உலக அமைதி மற்றும் நன்மைக்காகவும் 101 பெண்கள் முளைப்பாரி வைத்து வழிபட்டு தாமிரவருணி ஆற்றில் கரைத்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

மழை வேண்டியும்,  உலக அமைதி மற்றும் நன்மைக்காகவும் 101 பெண்கள் முளைப்பாரி வைத்து வழிபட்டு தாமிரவருணி ஆற்றில் கரைத்தனர்.
கல்லிடைக்குறிச்சி கோட்டைத் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன், சந்தனமாரி திருக்கோயிலிலில் 101 பெண்கள்  முளைப்பாரி வைத்து வழிபட்டனர். இதையடுத்து பிப். 13 செவ்வாய்க்கிழமை கோயிலிலில் கால்நாட்டப்பட்டது. தொடர்ந்து பெண்கள் காப்புக் கட்டி முளைப்பாரி விதை விதைத்தனர்.  தொடர்ந்து நாள்தோறும் பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி வழிபாடு செய்தனர்.   பிப். 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பெண்கள் கும்மியடித்தபடி பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தனர். புதன்கிழமை,  காப்புக் கட்டிய 101 பெண்கள் முளைப்பாரியை எடுத்துச் சென்று தாமிரவருணியாற்றின் கரையில் வைத்து வழிபாடு நடத்தி,  ஆற்றில் கரைத்தனர். 
இந் நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →