முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி கோயிலில் திருவாசக முற்றோதுதல்: 2000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சிவ.தாமோதரன், பழனியைச் சேர்ந்த ராஜம்மாள் சங்கரன் ஆகியோர் தலைமையில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது.
இக் கோயில் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள தேரை புதுப்பித்து தேரோட்டம் நடைபெறவும், நீர்வளம் செழித்து உலகநன்மை பெறவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. சீவலப்பேரி, குப்பக்குறிச்சி, நடுவக்குறிச்சி, கீழநத்தம், கீழப்பாட்டம், திருத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை சீவலப்பேரி பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.