திருநெல்வேலி

ம.தி.தா. இந்து கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, மகளிர் தின விழா நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பஷீர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெ. நயினாமுகம்மது, ரோட்டரி சங்க நிர்வாகி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், புற்றுநோய் தடுப்பது குறித்து குவாலிட்டி கேன்சர் மைய டாக்டர் ஜெ.ஜெ. சாரதா, பேசினார். மாணவிகளின் கேள்விகளுக்கு டாக்டர் பதிலளித்தார். புற்றுநோய் குறித்து பேசிய மாணவிகள் முத்துலட்சுமி, பத்மாசுந்தரி, ரத்னமாரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. பேட்டை காவல் ஆய்வாளர் பி. செல்வி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பொன்மணி சுபா செல்வம் ஆகியோருக்கு சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் ரந்தீர்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT