தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல்: நெல்லையில் வாக்குப்பதிவு
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழுவுக்கு 25 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் மொத்தமுள்ள 1086 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் அலுவலராக சார்பு நீதிபதி ஹேமந்தகுமார் செயல்பட்டார்.
வழக்குரைஞர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 940 பேர் வாக்களித்ததாக அறிவிக்கப் பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.