நடுக்கல்லூர் பள்ளியில் பூட்டு உடைப்பு: போலீஸ் விசாரணை
சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூரில் பள்ளியின் பூட்டை உடைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூரில் பள்ளியின் பூட்டை உடைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நடுக்கல்லூரில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலக்கல்லூர், பட்டன்கல்லூர், சங்கன்திரடு, பழவூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் சென்ற மர்மநபர்கள் தொடக்கப் பள்ளி வகுப்பறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். மேலும், வகுப்பறையில் இருந்த பெயின்ட், அரிசி உள்ளிட்டவற்றையும் தரையில் கொட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சுத்தமல்லி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கெனவே இருமுறை பூட்டை மட்டும் உடைத்த கும்பல், இப்போது பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளதால் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி கண்காணிக்க பொதுமக்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.