நெல்லை பல்கலை.யில் கணியான் கூத்து
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கணியான் கூத்து புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கணியான் கூத்து புதன்கிழமை நடைபெற்றது.
இன்றைய இளைஞர்களிடையே நாட்டுப்புற கலையான கணியான் கூத்து மூலம் விவேகானந்தரின் போதனைகள், தத்துவங்கள், இலக்கியங்களை மையமாக கொண்டு பல்கலைக் கழக விவேகானந்தர் கல்வி மையம் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், துணைவேந்தர் கி. பாஸ்கர், பதிவாளர் எஸ். சந்தோஷ்பாபு, கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பெ. சென்றாயபெருமாள், துறை பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர், ஒரு கிராமத்தை தத்தெடுத்து கிராமிய கலைகள் மூலம் விவேகானந்தரின் போதனை, தத்துவங்களை எடுத்துச் சொல்லப்படும் எனக் குறிப்பிட்டார்.