முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் ரூ.15.77 லட்சம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அதில், ரூ.15.77 லட்சம் வசூலாகியிருந்தது.

Updated On : 22 மே, 2018 at 5:19 AM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அதில், ரூ.15.77 லட்சம் வசூலாகியிருந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் வளாகத்தில் 21 உண்டியல்கள் உள்ளன. இவற்றை 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 315 வசூலாகியிருந்தது. தொடர்ந்து ஏப்.27 ஆம் தேதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனால் கோயில் உண்டியல்கள் நிரம்பிய நிலையில் திங்கள்கிழமை 21 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வக்குமாரி தலைமையில் ஆய்வாளர் முருகன், கண்காணிப்பாளர் ரவீந்திரன் முன்னிலையில் உண்டியல் பணத்தை கோயில் பணியாளர்களும், பக்தர்களும் எண்ணினர். 88 கிராம் தங்கம், 578 கிராம் வெள்ளி, ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 218 ரொக்கம் ஆகியவை வசூலாகியிருந்தன. உண்டியல் பணம் எண்ணும்போது தக்கார் அருணாசலம், கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.