சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை 4% உயர்வு!
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், 2026 ஏப்ரல் மாதம் முடிய, அதன் மொத்த விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 1,17,514 வாகனங்களாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
புதுதில்லி: சுஸுகி மோட்டார்சைக்கிள், 2026 ஏப்ரல் மாதம் முடிய, அதன் மொத்த விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 1,17,514 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் விற்பனையான 1,12,948 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது நல்லதொரு வளர்ச்சியாகும் என்றது.
ஏப்ரல் 2026 முடிய, நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 98,004 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு, விற்பனையான 95,214 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத வளர்ச்சியாகும் என்றது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
ஏப்ரல் 2025ல் 17,734 வாகனங்களாக இருந்த ஏற்றுமதி விற்பனையானது, ஏப்ரல் 2026ல் 10 சதவீதம் உயர்ந்து 19,510 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இந்த செயல்பாடு, வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
Advertisement
Advertisement
Suzuki Motorcycle India Pvt Ltd on Friday reported a 4 per cent increase in total sales.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.