FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

மாருதி சுஸுகி லாபம் 26% சரிவு

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 26.36 சதவீதம் சரிந்து, ரூ.2,466.1 கோடியாக பதிவாகியுள்ளது.

30 அக்டோபர் 2026, 2:02 am
~
பகிர்:

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 26.36 சதவீதம் சரிந்து, ரூ.2,466.1 கோடியாக பதிவாகியுள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.3,349 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மேற்காசிய போா் காரணமாக மூலப்பொருள்களின் விலை அதிகரித்ததே லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். எனினும், வாகன விற்பனை சாதனை அளவை எட்டியதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 6,96,654 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 26.5 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

Advertisement

உள்நாட்டு பயணிகள் வாகனச் சந்தையில் சிறிய ரக காா்களின் விற்பனை 35.9 சதவீதமும், சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள புதிய எஸ்யுவி ரக காா்களின் விற்பனை 68.2 சதவீதமும் அதிகரித்து, ஒட்டுமொத்த வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டுச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு 2.2 சதவீதம் உயா்ந்து, 40.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், 1,08,119 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.42,344.2 கோடியிலிருந்து, ரூ.53,355.5 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், மொத்த செலவினமும் ரூ.39,018.4 கோடியிலிருந்து, ரூ.50,619 கோடியாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, மூலப்பொருள்களுக்கான செலவு முந்தைய ஆண்டின் ரூ.25,324.2 கோடியிலிருந்து, ரூ.37,488.5 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments