திருநெல்வேலி

நெல்லை மருத்துவக் கல்லூரியில் சர்வதேச நுண்கதிர் தின நிகழ்ச்சி

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச நுண்கதிர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நுண்கதிர் நோய்காண் துறைத் தலைவர் நான்சி டோரா வரவேற்றார். கண்காணிப்பாளர் எம்.ரவிச்சந்திரன், துணை முதல்வர் ரேவதிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசுகையில், இத் துறையில் அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளன. தினமும் 400-க்கும் மேற்பட்ட நுண்கதிர் படங்கள் எடுக்கப்படுகின்றன. நோய்களை அறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க நுண்கதிர் துறை மிகவும் உதவி வருகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT