திருநெல்வேலி

நெல்லை இளைஞர் கொலை:  உணவு விடுதி தொழிலாளி கைது

DIN

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உணவு விடுதி தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் வினோத் என்ற சீவலப்பேரியான் (35). தாய், தந்தையைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வினோத் கடந்த 14ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். 
இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி நகரம், புட்டாரத்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கம்பர் முருகன் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். உணவு விடுதியில் வேலை செய்து வந்த கம்பர் முருகனை, வினோத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் இரும்பு அகப்பையால் தாக்கி கொலை செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT