திருநெல்வேலி

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச பேரிடர் குறைப்பு தின நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள், பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை பாதுகாப்பது,  தீ போன்ற பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பது குறித்து செயல்முறை மூலம் ஒத்திகை பயிற்சி நடத்திக் காட்டினர். முன்னதாக வடகிழக்கு பருவமழை காலங்களில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலகையில் மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார்,  திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT