முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மினிமாரத்தான் போட்டி

பாளையங்கோட்டையில் காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:27 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் உயிர் நீத்த காவலர்களின் நினைவாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாளையங்கோட்டை ஆயுதப்படை முன் தொடங்கிய இப்போட்டி மேட்டுத்திடல் சாலை,  ராணுவ கேன்டீன்,  தூய சவேரியார் கல்லூரி வழியாக மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை அடைந்தது. 
இப்போட்டியில் காவலர்கள், பொதுமக்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கே.கல்லத்தியான்,  பி.பொன்சக்தி,  டி.ஜோசப் மில்டனும்,  பெண்கள் பிரிவில் ஏ.திவ்யா,  சி.ரம்யா,  எஸ்.சுகன்யா ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 
போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, கு.சுகுணசிங் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உதவி ஆணையர் வடிவேலு, ஆய்வாளர்கள் சாது சிதம்பரம், மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.