முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சித்த மருத்துவ கருத்தரங்கு

சித்த மருத்துவ தொடர் கல்விப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:00 AM
பகிர்:

சித்த மருத்துவ தொடர் கல்விப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் சீட் அறக்கட்டளை,  அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டலம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் நீலாவதி தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல முதல்வர் ஜி.சக்திநாதன் முன்னிலை வகித்தார். சீட் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் பொன்னம்பலம் வரவேற்றார். வனிதா ராஜா சங்கர் அறிமுகவுரையாற்றினார்.
"குழந்தை நலப்பேணலில் சித்த மருத்துவம்' என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அரசு சித்த மருத்துவர் ஸ்ரீராமும், "வாழ்க்கையில் பல்வேறு பருவங்களில் ஏற்படும் மன அழுத்தமும், சித்த மருத்துவமும்'என்ற தலைப்பில் வேலூர் ஆண்டியப்பனூர் சித்த மருத்துவர் விக்ரம் குமாரும், ""வலி நிவாரணம் மற்றும் முடநீக்கு சிகிச்சையில் சித்த மருத்துவம்'' என்ற தலைப்பில்  ராஜா சங்கரும் பேசினர். குழந்தை பேறின்மை சிகிச்சையில் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் செங்கல்பட்டு சங்கரும்,"நாள்பட்ட வாழ்வியல் நோய்க்கான சித்த மருத்துவம்' என்ற தலைப்பில் கு.சிவராமனும் பேசினர். ராஜாவூர் அரசு சித்த மருத்துவர் ஜெயகெளரி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.