திருநெல்வேலி

புதிய விளையாட்டு நுணுக்கங்கள்: உடற்கல்வி இயக்குநர்களுக்கு பயிலரங்கு

DIN

உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு நுணுக்கங்கள் குறித்த பயிலரங்கு பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில், 2018-19 ஆம் ஆண்டுக்கான இந்த பயிலரங்கு வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. அண்ணா விளையாட்டு அரங்கில் இப்பயிலரங்ரகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச. செந்திவேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ்ராஜா முன்னிலை வகித்தார். 
பயிலரங்கில், நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், வாள்சண்டை, குத்துச்சண்டை, செஸ், சாலை சைக்கிள், கடற்கரை கையுந்து பந்து, சிலம்பம், வலைப்பந்து, டேக்வாண்டோ, கேரம் மற்றும் ஜூடோ ஆகிய 13 விளையாட்டுகளில் புதிய நுணுக்கங்கள் குறித்தும், தற்போது விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் புதிய விதிகள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்களுக்கு திறன்மிக்க வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.வீ. வீரபத்ரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT