திருநெல்வேலி

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் பெண் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

DIN

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் பெண் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகேயுள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைநயினார் (31). விவசாயி. இவரது மனைவி வெயிலாட்சி (29). இத் தம்பதிக்கு இருமகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது சுடலைநயினாருக்கு ஆதரவாக அவரது சகோதர் ஆயிரம் (25), தாய் வசந்தா ஆகியோர் சேர்ந்து வெயிலாட்சியுடன் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, வெயிலாட்சி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
இத்தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT