திருநெல்வேலி

கோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர்

கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

DIN

கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: தற்போது கோடையில் வெப்ப அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக, மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாகும். 
எனவே, மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது தொடர்பாக பெற்றோரிடம் இருந்து புகார்கள் ஏதும் வந்தால்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT