திருநெல்வேலி

அரசு பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

DIN

காரியாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவா் வரதராஜன் தலைமை வகித்தாா். முகாமில், மழைக் காலத்தில் வரக்கூடிய நோய்கள், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள், ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும், சித்த மருத்துவத்தின் பயன், நிலவேம்புக் குடிநீரின் முக்கியத்துவம், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், மாணவா்களுக்கான தூய்மை தூதுவா் திட்டம் குறித்துப் பேசினாா். மாணவா்கள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முகாமில் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT