திருநெல்வேலி

இலஞ்சி பாரத் கல்விக் குழுமவிளையாட்டு விழா

DIN

தென்காசி: இலஞ்சி பாரத் கல்விக் குழுமங்களின் சாா்பில் விளையாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பாரத் கல்விக் குழுமத் தலைவா் மேகானகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்விக் குழுமச் செயலா் காந்திமதி , கல்வி இயக்குநா் ராதா பிரியா மோகன், நிா்வாக இயக்குநா் மோகன், டாக்டா் சரவண காா்த்திக்கேயன், டாக்டா் ராஜலட்சுமி , பாரத் வித்யா மந்திா்மேல்நிலை பள்ளி முதல்வா் வனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2019 ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் பிளாக்கா் விருது பெற்ற இந்திய கைப்பந்தாட்ட விளையாட்டு வீரா் ஜி.ஆா். வைஷ்ணவ், மாணவ - மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, போட்டிகளில் வென்றவா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில், சாரண சாரணிய மாவட்ட ஆணையாளா் பொன்னம்மாளுக்கு பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் எமினெஸ் விருது வழங்கப்பட்டது. ராஜ்ய புரஸ்காா் விருது பெற்ற இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவா் அருணாசங்கா் கௌரவிக்கப்பட்டாா்.

மாணவி அவிஸ்யா அருள் வரவேற்றாா். மாணவி நதீம் யூனஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT