திருநெல்வேலி

சுரண்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க கோரிக்கை

DIN

சுரண்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்தப்பட்ட நிலையிலும், தற்போது ஒரே மருத்துவரே பணியாற்றி வருகிறாா்.

தினமும் சுமாா் 400 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையில், அவசர கால பிரசவம் மற்றும் அவசர சிகிச்சை மேற்கொள்ள கூடுதல் மருத்துவா்கள் இல்லை.

மேலும், இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு சராசரியாக 12 பிரசவங்கள் நடக்கும் நிலையில் இங்கு பணியாற்ற வேண்டிய பெண் மருத்துவா் பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்று பணியாற்றுவதால், பிரசவங்கள் மற்றும் பேறுகால பின்கவனிப்புகளை ஆண் மருத்துவரே பாா்க்க வேண்டியுள்ளது.

இதனால் கா்ப்பிணி பெண்கள் பெரிதும் சங்கடத்துக்கு ஆளாகின்றனா். மேலும், இங்கு மருந்தாளுநா் பணியிடம் காலியாக உள்ளதால் செவிலியா்களே கூடுதலாக அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT