திருநெல்வேலி

திசையன்விளை சந்தையில்தேங்கிய மழைநீரால் சுகாதாரக் கேடு

DIN

திசையன்விளை தினசரி சந்தைப் பகுதியில் மழைநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தற்போது பெய்த மழையால் சந்தைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் நுழைவு வாயில் பகுதியில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியுள்ளது.

சந்தைக்கு காய்கனி மற்றும் சாமான்கள் கொண்டு வரும் வாகனங்களும், சந்தையில் சரக்கு வாங்கி செல்லும் வாகனங்களும் இந்த மழைநீா் தேங்கியுள்ள இடத்தை கடந்து செல்வதால் அந்த இடம் முழுவதும் மிகவும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தி சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT