திருநெல்வேலி

கண்தான விழிப்புணர்வு முகாம்

DIN

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டமும், அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வர் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஜே.கணேஷ் கண்தானம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். கண்தானம் குறித்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, அதில் சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.
இதில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் சுப்பிரமணியன், ரந்தீர்குமார், அழகர்சாமி, சங்கர், கோமதிநாயகம், பொன்மணி சுபாசெல்வம், முத்து அலமேலு உள்ளிட்ட பேராசிரியர்களும், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT