திருநெல்வேலி

பாளை. கல்லூரியில் கருத்தரங்கு

DIN

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆய்வுக் கணினி அறிவியல் துறையின் சார்பில் இயந்திர கற்றல் மற்றும் ஆழ்நிலைக் கற்றல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் துறைத் தலைவர் எஸ்.ஷாஜு நிஷா வரவேற்றார். கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக் தலைமை வகித்தார். அரசுதவி பெறா பாடப் பிரிவுகளின் இயக்குநர் ஏ.அப்துல்காதர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.சந்தோஷ்பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இயந்திர கற்றல் மூலம் எழுத்துரு அறிதல் என்ற தலைப்பில் முனைவர் சி.சேவியரும், ஆழ்நிலைக் கற்றல் முறையில் பொருளை அறிதல் மற்றும் வகைப்படுத்துதல் என்ற தலைப்பில் முனைவர் ஜி.எம்.நசீராவும் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரோஸ்லின், பிரமு கைலாசம், முகம்மது ரியாசுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT