திருநெல்வேலி

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வண்ணார் சமுதாயத்தினர் கோரிக்கை

DIN

வண்ணார் சமுதாயத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க எடுக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரத்தில் உள்ள வண்ணார் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்திடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் நலிவடைந்த வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இஸ்திரிப் பெட்டி வழங்கக் கோரி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அந்த நலத்திட்ட உதவிகளை மாநில அரசு மூலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் உள்ளதுபோல அனைத்து வண்ணார் சமுதாய மக்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து வண்ணார் சமுதாய மக்களுக்கும் உள்பிரிவுகளின்றி சூரியகுல இந்து வண்ணார் என்று ஒரே சாதிச் சான்றிதழை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் சலவைத் தொழிலாளர்களுக்கும் மழைக் கால நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT