திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கு

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கான ஓலைச்சுவடி பாதுகாப்பு குறித்து பயிலரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் முதலாமாண்டு சித்த மருத்துவம் பயிலும் மாணவர்- மாணவிகளுக்கு ஓலைச்சுவடி பாதுகாப்பு குறித்த 2 நாள்
பயிலரங்கு சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. 
வியாழக்கிழமை தொடங்கிய இப்பயிலரங்கிற்கு அரசு சித்த மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் திருத்தணி தலைமை வகித்தார். துறைத் தலைவர் மருத்துவர் பா. மலர்விழி வரவேற்றார்.
பயிலரங்கின் முதல் அமர்வில் "சுவடியும் கணினியும்' எனும் தலைப்பில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் இரா. ஸ்பர்ஜன் ரத்தீஷ், 2 ஆவது அமர்வில்
"ஓலைச்சுவடி பாதுகாப்பு' எனும் தலைப்பில் அருங்காட்சியக காப்பாட்சியர்  சிவ. சத்தியவள்ளி ஆகியோர் பேசினர்.
வெள்ளிக்கிழமை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கில், "சுவடியியல்' குறித்து ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் வே. கட்டளை கைலாசம்
பேசினார். தொடர்ந்து "ஓலைச்சுவடிகளின் தோற்றங்கள்-வரலாறு' எனும் தலைப்பில் மாணவர்- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி, சுவடிகள் பாதுகாப்பு குறித்து
செய்முறை விளக்கம் அளித்தார். இதில், " மேலும்"சிவசு  கலந்துகொண்டு மாணவர்- மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினார். சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் வேதகிரி சுப்பையா நன்றி
கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT