திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்  தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு  வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது. தேசிய மக்கள்
நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது தொடங்கி வைக்கிறார். இதில், மோட்டார் வாகன வழக்குகள், குடும்ப நல வழக்குகள்,
உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் என சுமார் 4,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.  எனவே பொதுமக்கள்,
வழக்காளர்கள் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் தங்களின் வழக்குகளுக்கு சமரச வழி மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT