திருநெல்வேலி

களக்காட்டில் தாமிரவருணி நீரை  விநியோகிக்கக் கோரிக்கை

களக்காடு பேரூராட்சிப் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

DIN

களக்காடு பேரூராட்சிப் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.  இம்மக்களுக்கு, தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும்  20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில்,  சில ஆண்டுகளாக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதானது.
இதையடுத்து,  தாமிரவருணி குடிநீர்   மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஆழ்துளை கிணறு, வடகரை பச்சையாறு தண்ணீரை கலந்து விநியோகிக்கப்படுகிறது.  இதனால் குடிநீர் உவர்ப்பாக மாறியதால் மக்கள் அந்த தண்ணீரைக் குடிக்க முடியாமல் விலைக்கு குடிநீரை வாங்கி பருகும் நிலை உள்ளது. எனவே,   இப்பேரூராட்சி முழுவதும்  தாமிரவருணி குடிநீரை  விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT