திருநெல்வேலி

கடையம் அருகே லாரி மூலம் குடிநீர் விநியோகம்

DIN


 கடையம் அருகே வெங்காடம்பட்டி கிராம மக்களுக்கு லாரி மூலம் திமுக சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது .
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய போதிலும் மழை தொடர்ந்து பெய்யவில்லை. இதனிடையே, ராமநதி, கடனாநதி அணைகள் வறண்டதால் கடையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வெங்காடம்பட்டி கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தார்.
அப்போது, அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க வில்லை. பொதுமக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து சின்னகுமார்பட்டி, தெற்கு மயிலப்புரம், பறும்பு ஆகிய கிராமங்களை சந்தித்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதிஅளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT