திருநெல்வேலி

ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழா தொடக்கமாக வியாழக்கிழமை காலை கொடியேற்றமும், தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனம், அப்பர் சுவாமி வீதியுலா, இரவு விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதியுலா, இரவு 9 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  வெள்ளிக்கிழமை காலை சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனம், விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி பூங்கோயில், அம்பாள் சிங்க வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 
தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 10ஆம் திருநாளான மார்ச் 23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கட்டளைதாரர் டாக்டர் ரமேஷ், நல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசுந்தரி சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா செளந்திரராஜன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT