திருநெல்வேலி

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

கீழப்பாவூரில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

DIN

கீழப்பாவூரில்... 

கீழப்பாவூரில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வன்,  ஒன்றிய மதிமுக செயலர் இராம.உதயசூரியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் பொன்.அறிவழகன், பொன்லதாசிவகுமார், முன்னாள் மாவட்ட உறுப்பினர் வைகுண்டராஜா மற்றும் ராமச்சந்திரன், கருப்பசாமி, கடற்கரை, கலைச்செல்வன், குகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,  திருநெல்வேலி மக்களவைத்  தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு கீழப்பாவூர் ஒன்றியப் பகுதிகளில் வீடு, வீடாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கடையநல்லூரில்... 

கடையநல்லூர் நகர திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர திமுக செயலர் சேகனா தலைமையில் நடைபெற்றது.
 இதில், சமுத்திரம் (காங்கிரஸ்),  அப்துல் லத்தீப் (முஸ்லிம் லீக்), முருகன் (ம.தி.மு.க), ராஜசேகரன் (சிபிஎம்), முத்துசாமி(சிபிஐ), பாக்கியநாதன் (விசிக), திமுக நிர்வாகிகள் சங்கரன் ,பால்துரை, அப்துல்வகாப் ,மஸ்தான், அலி, பெருமாள்துரை,  ஜபருல்லா ,மூர்த்தி ,ஜமீம் அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில், வார்டு வாரியாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT