திருநெல்வேலி

கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்

DIN

கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு பாமா- ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 29ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன .இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 8ஆவது நாளான திங்கள்கிழமை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. கடையநல்லூர் வட்டாட்சியர் தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார் . இதில், துணை வட்டாட்சியர் ஏசுராஜன், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நிர்வாகிகள் பிரபாகரன், தேவேந்திரன்,முருகன், ராசாகுட்டி, மாரி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 7) முளைப்பாரி ஊர்வலமும், 10ஆம் நாளில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT