திருநெல்வேலி

கடனாநதி அணை கோரக்கநாதர்  கோயிலில் பெளர்ணமி வழிபாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடனாநதி அணைப் பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடனாநதி அணைப் பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சுவாமி கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, வைகாசி விசாகமும் பெளர்ணமி தினமுமான சனிக்கிழமை சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT