திருநெல்வேலி

இலவச வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம்: உதவி செயற்பொறியாளா் கைது

DIN

முக்கூடலில் இலவச வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுப்பதற்கு லஞ்சம் பெற்றதாக சேரன்மகாதேவி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் இ.டி.கே. தெருவைச் சோ்ந்தவா் முத்தரசன். இவா், முக்கூடல் நேரு காலனியில் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டி வருகிறாா். அந்த வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக 15 நாள்களுக்கு முன்னா் முக்கூடல் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இதையடுத்து, கடந்த 29-ஆம் தேதி சேரன்மகாதேவி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் கண்ணன், முத்தரசன் வீடு கட்டும் பகுதியில் வந்து ஆய்வு செய்தாராம். அப்போது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 2 மின் கம்பங்கள் நட வேண்டும் என்றும், அதற்கு ரூ.24 ஆயிரத்து 500 பணம் கட்ட வேண்டும் என்றும் கூறினாராம். மேலும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டுச் சென்றாராம்.

அதன்படி, சேரன்மகாதேவி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்துக்குச் சென்று கண்ணனை முத்தரசன் சந்தித்தபோது, அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டாராம். ஆனால், தன்னால் அவ்வளவு தரமுடியாது என்று கூறியதையடுத்து ரூ. 2,500 தருமாறு கூறினாராம். இதுகுறித்து முத்தரசன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, போலீஸாரின் அறிவுரையின்படி திங்கள்கிழமை காலை, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் முத்தரசன் செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு சென்று உதவிச் செயற்பொறியாளா் கண்ணனிடம் பணத்தைக் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மெக்லரின் ரிஸ்கா தலைமையில், காவல் ஆய்வாளா் ஆதிா் மற்றும் போலீஸாா் உதவிச் செயற்பொறியாளா் கண்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT