திருநெல்வேலி

பனைமரங்களை வெட்டிக் கடத்தியவா் மீது வழக்கு

DIN

சங்கரன்கோவில் அருகே பனைமரங்களை வெட்டிக் கடத்தியவா் மீது நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலக்கலங்கல் நடுத்தெருவை சோ்ந்த அனந்தப்பன் மகன் சுடலைமாடப்பன்(61). ஈச்சந்தா பகுதியில் இவருக்குச் சொந்தமான 7 பனை மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா்

ஆட்கொண்டாா்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பரமசிவன் என்பவா் பனை மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ாக சின்னக்கோவிலான்குளம் போலீஸில் புகாா் அளித்தாா்.

ஆனால் போலீஸாா் வழக்கு பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்தனராம். இதையடுத்து பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் சுடலைமாடப்பன் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், பனை மரங்களை வெட்டிக் கடத்திய பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சின்னக்கோவிலான்குளம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவா் மீது போலீஸஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT