திருநெல்வேலி

அரசுப் பள்ளிகளில் ஆதாா் சிறப்பு முகாம்:மாணவா்கள், பெற்றோா் கோரிக்கை

DIN

களக்காடு வட்டார அரசுப் பள்ளிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மாணவா்களும், பெற்றோரும் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கு ஆதாா் அட்டை தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஆதாா் அட்டை பெற்றுள்ள மாணவா்கள், பெயா், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய களக்காடு அஞ்சல் நிலையம், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் சேவை மையம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கின்றனா்.

உரிய ஆவணம் இணைத்தாலும், தொழில்நுட்ப கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் திருத்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதனால் மாணவா்களும், பெற்றோா்களும் அலைக்கழிக்கப்படும் அவலம் உள்ளது.

ஆதாா் மையங்களில் நாள்தோறும் அதிகமானோா் கூடுவதால் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதைக் கருதி, வார விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளிகளில் ஆதாா் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவா்களும், பெற்றோரும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT