திருநெல்வேலி

கடையநல்லூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

கடையநல்லூரில் நீர்ப் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். கடையநல்லூர் வட்டாட்சியர் அழகப்பராஜா, வனச் சரகர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி ஆட்சியர் (பயிற்சி)  சிவகுருபிரபாகர் பேரணியைத் தொடக்கிவைத்தார். மணிக்கூண்டு அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வன அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்து மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் செல்வபாக்கியசாந்தினி, நகராட்சிப் பொறியாளர் தங்கப்பாண்டி, சுகாதார அலுவலர் நாராயணன், நகரமைப்பு ஆய்வாளர் ஜின்னா, மேலாளர்(பொறுப்பு) முகமதுயூசுப், பொறியியல் பிரிவின் கணேசன், ரத்னா பள்ளிகளின் தலைமையாசிரிகள் சக்திவடிவு, தங்கம், சாதனா வித்யாலயா பள்ளித் தாளாளர் ரமேஷ்,  முதல்வர் மயில்கண்ணு, நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்சக்திஅபியான் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT