திருநெல்வேலி

வெங்காடம்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மைத் துறை, வேளாண்மைத் தொழில்நுட்ப முகமை ஆகியவை சார்பில் கடையம் வட்டாரம், வெங்காடம்பட்டியில் விவசாயிகளுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது.
கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் தலைமை வகித்தார். பயிற்சியில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானியத் திட்டங்கள், பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் குறித்து வேளாண் அலுவலர் அபிராமி எடுத்துரைத்தார். திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர் தங்கம் விவசாயக் குழுக்களின் நோக்கம், முக்கியத்துவம், பதிவேடுகளைப் பராமரிக்கும் முறை, வங்கிக் கணக்கு நடைமுறைப்படுத்துதல், குழுக்களின் மூலம் அரசு மானியங்கள் பெறும் முறை குறித்து விளக்கினார். பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் வரவேற்றார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பால்துரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT