திருநெல்வேலி

அண்ணா பிறந்த நாள் விழா: அதிமுகவினருக்கு அழைப்பு

DIN

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு அதிமுகவினருக்கு மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரைப்படி,  அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள்,  முன்னாள், இந்நாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். எனவே அதிமுகவின் சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT