திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

DIN

சங்கரன்கோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியை மேம்படுத்தும் வகையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன்அப்துல்காதர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
முகாமில், குப்பைகளை பிரித்து வாங்கும் நடைமுறை, குப்பைகளை உரமாக்குவதற்கு செயல்படுத்த வேண்டிய வழி முறைகள்  மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சங்கரன்கோவில் சுகாதார ஆய்வாளர் சக்திவேல், புளியங்குடி  சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் லெட்சுமணன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பிச்சையா பாஸ்கர் மாதவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT