திருநெல்வேலி

புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவைத் திரும்ப பெற வேண்டும்; 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், இரண்டு மொழிப் பாடங்களுக்கு 4 தாள்களாக தேர்வு எழுதுவதை ஒரே தாளாக தேர்வு எழுத வைப்பது, தாய்மொழி தமிழ் கல்வியை படிப்படியாக அழிக்கும் செயலாகும்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது. தமிழ் தெரியாதவர்கள்கூட தமிழகத்தில் நடத்தப்படும் நீதிபதிகள் தேர்வு எழுதலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்டச் செயலர் ஆர்.மாரிமுத்து தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் ஜி.ரமேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். புரட்சிகர இளைஞர் கழக அமைப்புக் குழு உறுப்பினர்கள் பேச்சிராஜா, பேச்சிமுத்து, பிரகாஷ், சுடலைமணி, ரவிடேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT