திருநெல்வேலி

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திருவிழா:தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது

DIN


ஆலங்குளம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் திருவிழா தசரா ஊர்வலத்துடன் தொடங்கியது. 
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமமும், வருஷாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை பகல் 1 மணிக்கு குழந்தைகள் பங்குபெறும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை மாலை 1503 திருவிளக்கு பூஜையும்,  இரவு 8 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றமும், திங்கள்கிழமை (செப். 30) காலை கோமாதா பூஜையும், இரவு 12 மணிக்கு சாம பூஜையும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை (அக். 1) காலை  பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் , பூ வளர்த்தலும் நடக்கிறது.  மாலை 5.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.  இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா வருதல் அதைத் தொடர்ந்து நேமிதம், 54 முளைப்பாரி, ஆயிரம் கண்பானை ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வழக்குரைஞர் கணபதி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT