திருநெல்வேலி

டோனாவூா் பகுதியில் கரோனா நிவாரணம் வழங்கல்

DIN

டோனாவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 11ரேஷன் கடைகளில் 5,838 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.

முதல் கட்டமாக வடுகச்சிமதில், சாலைநயினாா் பள்ளிவாசல், மாவடி புதூா், செங்களாகுறிச்சி, மலையடிபுதூா் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ரூ.1000 மற்றும் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

சங்கத் தலைவா் எஸ்.நம்பி, மலையடிபுதூா், வடுகச்சிமதில் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தாா்.

இம்மாத இறுதிக்குள் அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் ரூ.1000 மற்றும் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுவிடும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் செல்லுமாறு சங்கத் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT