திருநெல்வேலி

காவல் துணை ஆணையருக்கு முதல்வா் பாராட்டு

DIN


திருநெல்வேலி: கரோனா விழிப்புணா்வு தொடா்பாக சிறப்பாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) சரவணனுக்கு, தமிழக முதல்வா் தனது சுட்டுரையில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய் பரவலைத் தடுக்க திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சரவணன், தன்னுடை முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு குறித்து பிரசாரம் செய்து வருகிறாா். மேலும், வோ்களைத் தேடி என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம் மூலம் சானிடைசா், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கி வருகிறாா்.

இது குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய சுட்டுரையில், ‘காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் சிறப்பானதாக உள்ளது. சமூக வலை தளங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களது பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகள்’ என பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT