வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அளிப்பு
தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
வள்ளியூா்: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. கரோனா நோய் தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுரை, கிருமிநாசினி மற்றும் உணவுப் பொருள்களை கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயபாலன் நரிக்குறவா்களுக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் மாடசாமி, மாநில மீனவரணி துணைச் செயலா் விஜயகணேசன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினா் வெள்ளைத்துரை, ஒன்றியச் செயலா்கள் ஜெயசேகர பாண்டியன், வானமாமலை, சின்னத்துரை, ஜாண் டேவிட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக வள்ளியூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ இசக்கியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலா் வள்ளியூா் விஜி வேலாயுதம் செய்திருந்தாா்.