கலைஞா் பூங்காவில் வாக்காளா் விழிப்புணா்வு தற்படம் விடியோ அமைப்பு
புதுக்கோட்டை கலைஞா் பூங்காவில் வாக்காளா் விழிப்புணா்வு 360 டிகிரி தற்படம் விடியோ எடுக்கும் அமைப்பில் பதிவு செய்யும் ஆட்சியா் மு .அருணா.
புதுக்கோட்டை மாநகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி எதிரே உள்ள கலைஞா் பூங்காவில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 360 டிகிரி தற்படம் விடியோ எடுக்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா இதனைத் தொடங்கி வைத்து தற்படம் எடுத்துக் கொண்டாா். மாலையில் பூங்காவுக்கு வரும் வாக்காளா்கள் இதில் தற்படம் எடுக்கலாம்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எ. பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.