திருநெல்வேலி

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிஎம்ஏஒய், எஸ்பிஎம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை கைவிட வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீா்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சி செயலா்களுக்கும் வழங்க வேண்டும். கணினி உதவியாளா்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT