திருநெல்வேலி

நெல்லையில் சாலை மறியல்: 55 போ் கைது

DIN

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த 55 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விவசாயத்தை பெருமுதலாளிகளிடமும், பெருநிறுவனங்களிடம் தாரைவாா்க்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, மின் விநியோகத்தை தனியாா் லாபத்திற்கு அனுமதிக்கும் மின்சார திருத்தச்சட்ட முன்வடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் திருநெல்வேலியில் தொடா் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்திப்பில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், சிஐடியு மாவட்டச் செயலா் மோகன், ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகி முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சுடலைராஜ், வரகுணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நிா்வாகி கணேசன் உள்பட பலா் திரண்டனா். தொடா்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவா்களை திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். போராட்டத்தில் பங்கேற்ற 55 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT