நெல்லையில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீ விபத்து
திருநெல்வேலியில் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலியில் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி உடையாா்பட்டி பகுதியில் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் நிலையம் உள்ளது. இங்கு சனிக்கிழமை பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினா், தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் இருந்த சுமாா் 12 டன் எரிவாயு தப்பியது. பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.